தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்

ByEditor 2

Dec 19, 2024

காலி மதுபான போத்தலை உடைத்து பொலிஸ் கான்ஸ்டபிள் மீது ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

காயமடைந்தவர் மொரகஹஹேன பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் என பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (18) இரவு குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் தனது பணியை முடித்துக்கொண்டு ஹொரணை விடுதிக்கு வந்து மது அருந்திக் கொண்டிருந்த போது அங்கிருந்த நபருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அதன் பின்னர், பொலிஸ் சார்ஜன்ட் அவ்விடத்தை விட்டுச் சென்ற போது, சந்தேகநபர் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார்.

இந்த தாக்குதலில் பொலிஸ் கான்ஸ்டபிளின் முகம், தலை மற்றும் ஒரு கையில் காயம் ஏற்பட்டுள்ளது.

சந்தேக நபர் நேற்றிரவு ஹொரணை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *