மனித உரிமை ஆணையத்துக்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள்

ByEditor 2

Dec 19, 2024

இலங்கை (Sri Lanka) மனித உரிமைகள் ஆணையத்தில் நாளாந்தம் ஏராளமான முறைப்பாடுகள் குவிந்து கொண்டிருப்பதாக ஆணையத்தின் ஊடக அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நாளாந்தம் 60 முறைப்பாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெறுவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் ஜி.புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

சுமார் அறுநூறு முறைப்பாடுகள்

கடந்த கோவிட் தொற்றுக் காலத்திலிருந்து சேகரிக்கப்பட்ட சுமார் 8000 முறைப்பாடுகள் இன்னும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கை பொலிஸ், கல்வி மற்றும் சுகாதார திணைக்களங்களுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் அறுநூறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

தாமதமாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *