தண்டவாளத்தில் தலையை வைத்த யுவதி

ByEditor 2

Dec 18, 2024

புத்தளம், முந்தல் நவதன்குளம் பகுதியில் யுவதி ஒருவர் ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனது காதலனுக்கு வேறு உறவு இருப்பதாக சந்தேகமடைந்த யுவதியொருவர் நேற்று இவ்வாறு தனது உயிரை மாய்த்துள்ளார்.

தனியார் ஆடை நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்த 20 வயதுடைய பியுமி மல்ஷானி என்பவரே உயிரிழந்துள்ளார்.

காதலர்களுக்கு இடையில் ஏற்பட்ட காரசாரமான தொலைபேசி உரையாடலின் பின்னர் மகள் விபரீத முடிவை எடுத்துள்ளதாக தாயார் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ரயில் வரும் தண்டவாளத்தை நோக்கி, மகள் ஓடியதை கண்ட தாயார் அலறியடித்து போதிலும் அவர் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.

சாரதி ரயிலை நிறுத்தி யுவதியின் சடலத்தை மதுரங்குளிய ரயில் நிலையத்திற்கு கொண்டு சென்ற நிலையில், புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *