பிரித்தானியாவில் சாரதிகளுக்கு எச்சரிக்கை

Byadmin

Dec 17, 2024

பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி வார இறுதி நாட்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால் பயணங்களைத் தவிர்க்குமாறு பிரித்தானிய சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிரித்தானிய தானியங்கி சேவைகள் நிறுவனமான ‘RAC’மற்றும் போக்குவரத்து ஆய்வமைப்பான ‘Inrix’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளன.ஆய்வின் படி, இந்த வாரம் முதல் கிறிஸ்துமஸ் தினத்திற்கு முந்தைய நாள் வரை 29. 3 மில்லியன் பேர் சாலைகளில் பயணிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பிற்பகல் 1.00 மணிமுதல் இரவு 7.00 மணி வரை போக்குவரத்து மிக அதிகமாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், பிரித்தானியாவில் தற்போது, தொடருந்து பராமரிப்புகள் மேற்கொள்ளப்படுவதால் சாலை வழியாக பயணிப்போரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பயணங்களை முன்கூட்டியே தீர்மானிப்பது நல்லது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *