இந்தியாவுக்கு மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு ராஷ்டிரபதி பவனில் நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்தது.
இந்த சந்திப்பில், இலங்கையின் நிலையான பொருளாதார அபிவிருத்திக்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு நெருக்கமான மற்றும் நம்பகமான பங்காளியாக இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என இந்திய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதன்போது, ஜனாதிபதிக்கு விருந்துபசாரமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது