புதிய சபாநாயகர் தெரிவு நாளை!!

Byadmin

Dec 16, 2024

பாராளுமன்றம் நாளை (17) கூடவுள்ளது.அதன்படி, இந்த வாரத்தில் நாடாளுமன்றம் கூடி நாளை(17) நாளை மறுதினம் (18) இரண்டு நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது வெற்றிடமாக உள்ள சபாநாயகர் பதவிக்கு புதிய சபாநாயகர் தெரிவு செய்யப்பட உள்ளார்.அதன் பின்னர் வழமை போன்று பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

நாளை காலை 9.30 முதல் 10.30 வரையான நேரம் வாய்வழி பதில்களை எதிர்பார்க்கும் நேரடி கேள்விகளுக்கு ஒதுக்கப்பட்டது.எனினும் புதிய சபாநாயகர் தெரிவு ஆரம்பமாகவுள்ளதாகவும் அதற்கு சிறிது காலம் எடுக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சபாநாயகர் என்ற வகையில், அசோக ரன்வலவின் இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதையடுத்து, 10வது பாராளுமன்றத்தின் சபாநாயகர் பதவி தற்போது வெற்றிடமாக உள்ளது.எனினும் சபாநாயகர் பதவிக்கு ஆளுங்கட்சி சார்பில் ஏற்கனவே 3 பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் தற்போதைய பிரதி சபாநாயகரின் பெயரும் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போதைய நிலையில் புதிய சபாநாயகர் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக ஆளும் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *