உலகை விட்டு பிரிந்தார் ஷாகிர் ஹுசேன்!!

Byadmin

Dec 16, 2024

இந்தியாவின் புகழ்பெற்ற தபேலா இசை வித்துவான் உஸ்தாத் ஷாகிர் ஹுசேன் தனது 73ஆவது வயதில் காலமானார்.

இதய பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த ஷாகிர் ஹுசேன், சிகிச்சை பலனில்லாமல் இன்று இரவு காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளதுஇந்திய நாட்டின் தலைசிறந்த தபேலா இசைக் கலைஞர்களில் ஒருவரான உஸ்தாத் ஷாகிர் ஹுசேன், 1951ம் ஆண்டு மார்ச் 9ம் திகதி மும்பையில் பிறந்தார்.

அவரது தந்தை உஸ்தாத் அல்லா ரக்கா குரேஷியும் ஒரு சிறந்த தபேலா கலைஞர் ஆவார்.

சிறு வயதில் இருந்தே தபேலா வாசிப்பதில் சிறந்து விளங்கிய ஷாகிர் ஹுசேன், 11 வயதில் அமெரிக்காவில் தனது முதல் கச்சேரியை வெற்றிகரமாக நடத்தினார்.தந்தையுடன் அவர் அந்த இசைக் கச்சேரியை நடத்தி இருந்தார். அதில் தனக்குச் சம்பளமாக ஐந்து ரூபாய் வழங்கப்பட்டதாகப் பின்னர் ஒரு நேர்காணில் நினைவு கூர்ந்திருந்தார்.

ஷாகிர் ஹுசேன் இசைத் துறையில் செய்த சாதனைகளுக்காக அவருக்கு 1988ம் ஆண்டு பத்மஸ்ரீ, 2002இல் பத்ம பூஷன் மற்றும் 2023இல் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. மேலும், இவர் ஐந்து கிராமி விருதுகளைப் பெற்றுள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *