வத்தளை பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள ஹெந்தல புராண ரஜமஹா விகாரையின் ஸ்ரீ சம்புத்த ஜயந்தி பெரஹர நேற்று (14) வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பல பக்தர்கள் கலந்து கொண்டு புத்த சமய மரபுகளைப் பாதுகாத்து வளர்க்கும் வகையில் தங்களது பக்தியை வெளிப்படுத்தினர்.
இந்த பெரஹரவில் அலைமுதல்கள், சுடர் தீபங்கள் மற்றும் பாரம்பரிய கலைஞர்கள் பங்கேற்று, நிகழ்வுக்கு அழகு சேர்த்தனர். குறிப்பாக, ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மஹோற்சவ யானைகள் பெரஹராவின் மையமாக இருந்தன. யானைகள் நகர்ந்து செல்லும் தோரணம் பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. ஹெந்தல புராண ரஜமஹா விகாரையின் பௌத்த பிக்குமார்கள் மற்றும் பக்தர்கள் இந்நிகழ்வை வெற்றிகரமாக ஏற்பாடு செய்தனர்.
இந்த சிறப்பு நிகழ்வைவிற்கு தக்க பாதுகாப்பு வழங்குவதில் வத்தளை பொலிஸ் அதிகாரிகள் முக்கிய பங்கு வகித்தனர். இந்நிகழ்வின்போது தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து, பக்தர்கள் உற்சாகமாக கலந்துகொள்வதற்கான சூழல்களை ஏற்படுத்திய வத்தளை பொலிஸாருக்கு ஹெந்தல மக்கள் தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.
இது போன்ற பாரம்பரிய நிகழ்வுகள் சமூக நல்லிணக்கத்தையும் சமய ஒற்றுமையையும் மேம்படுத்தும் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது.



