எதிர்க்கட்சியிலிருந்து சபாநாயகர் முன்மொழி!!

Byadmin

Dec 15, 2024

சபாநாயகர் பதவிக்காக எதிர்க்கட்சியிலிருந்து பெயரினை முன்மொழியவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வில் இந்தப் பெயர் முன்மொழியப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணி ஒரு பொறுப்பான கட்சியாக செயல்பட வேண்டும்.வெளிப்படையாக, சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தால் மட்டும் போதாது.இவர்கள் செய்தது நாட்டு மக்களை தவறாக வழிநடத்தும் செயலாகும். அவர் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.இது தொடர்பாக எமக்கு கடுமையான விமர்சனங்கள் உள்ளன. செவ்வாய்கிழமை எதிர்க்கட்சியிலிருந்தும் சபாநாயகர் பதவிக்காக பெயர் ஒன்றை முன்மொழிவோம் என எதிர்பார்க்கிறோம்.ஏனென்றால் அடுத்த சபாநாயகராக திசைகாட்டியால் பரிந்துரைக்கப்படும் நபரின் மீதும் நம்பிக்கை இல்லை.இதில் பலத்த சந்தேகம் உள்ளது. அடுத்த முறை நம்மை ஏமாற்ற முடியாது.நாங்கள் ஏமாற்றப்பட்டு அவரை ஆதரித்தோம். எனவே எதிர்வரும் பாராளுமன்ற தினத்தில் எதிர்க்கட்சியில் இருந்தும் பெயரை கண்டிப்பாக முன்மொழிவோம்.ஆனால் முன்மொழியப்படுபவர் தவறான கல்விச் சான்றிதழ்களைக் கொண்டிருப்பவரில்லை” என்றார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *