18 வயதில் விமானியாகி ஸமய்ரா

ByEditor 2

Dec 14, 2024

இந்தியாவின் கர்நாடகாவை சேர்ந்த  ஸமய்ரா ஹுல்லர் 18 -வயதில் விமானியாக வரலாற்று சாதனை படைத்த்துள்ளார்.

கர்நாடகாவைச் சேர்ந்த 18 வயது ஸமய்ரா இந்தியாவின் இளம்விமானியாக வரலாற்றில் தனது பெயரை பதித்துள்ளார்.அனைத்து கடுமையான தேர்வுகளிலும் வெற்றி பெற்று தனது வணிகவிமானிஉரிமம் (CPL) ஈட்டி, விமான போக்குவரத்து துறையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லை அவர் அடைந்துள்ளார்.ஸமய்ராவின் பயணம் அவருடைய ஒப்பற்ற அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, போட்டி நிறைந்த துறையில் சிறந்து விளங்குவதற்கான உறுதிக்கு சான்றாகும். இளம் வயதிலேயே இத்தகைய அசாதாரணமான சாதனையை பெற்று, நாடு முழுவதும் பயிலும் எண்ணற்ற விமானிகளுக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்.அவளுடைய வெற்றிக் கதை ஒரு உத்வேகத்தின் தீரம், விடாமுயற்சியின் சக்தியையும் தடைகளை உடைக்கும் தைரியத்தையும் வெளிக்காட்டுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *