இலஞ்சம் கோரிய குடிவரவு குடியகல்வு திணைக்கள ஊழியர் கைது

ByEditor 2

Dec 13, 2024

கடவுச்சீட்டு வழங்குவதற்காக ஒருவரிடம் இலஞ்சம் கோரிய குடிவரவு குடியகல்வு திணைக்கள ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

6000 ரூபா இலஞ்சம் பெற்றதாக சந்தேகத்தின் பேரில் திணைக்களத்தின் எழுத்தர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இந்நிலையில் குறித்த நபரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர் தொடர்பான விசாரணைகள் நிறைவடையாததால், அவரை விளக்கமறியலில் வைக்குமாறு, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதற்கமைய சந்தேக நபரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *