2025 புத்தாண்டில் வானில் பல கிரகங்கள் அருகருகே நிற்கும் அரிய வானியல் நிகழ்வு நடைபெற உள்ளது. ஜனவரி 25ஆம் தேதி இரவு வானத்தில் இந்த அபூர்வமான நிகழ்வு நடைபெற உள்ளது. இதை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
2025 அபூர்வ நிகழ்வு
வரவிருக்கும் 2025 புத்தாண்டில் பல கிரகங்கள் அருகருகே நிற்கும் அரிய நிகழ்வு நடைபெற உள்ளது. இது ஜனவரி 25 ம் திகதி நடைபெற உள்ளது. சூரியக்குடும்பத்தில் பல கோள்கள் பயணம் செய்து வருகின்றது.

இந்த நிகழ்வில் புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய கோள்கள் வானத்தின் ஒரே பகுதியில் ஒன்றாகத் தெரியும். ஆனால் இவை நேர்கோட்டில் தெரியாது. இந்த நிகழ்வை நேரடியாக நாம் பார்க்கும் போது கோள்கள் அனைத்தும் ஒன்றாக சேர்ந்து நடனமாடுவதை போல இருக்கும்.
இது ஜோதிட ரீதியாக பல மாற்றங்கள் நடப்பதாக கூறப்படுகின்றது. விஞ்ஞான ரீதியாக, கிரகங்களின் வெவ்வேறு சுற்றுப்பாதை காலங்கள் காரணமாக இதுபோன்ற அமைப்புகள் ஏற்படுகின்றன எனப்படுகின்றது.
பூமியில் இந்த நிகழ்வுகளை எப்போதாவதுதான் காண முடியும். 2025 ஜனவரி மாதம் நிகழும் கோள்களின் சீரமைவு சிறப்பு வாய்ந்தது. இதை பூமியிலிருந்து வெறும் கண்களாலேயே பார்க்கலாம். இது சூரிய அஸ்தமனத்தின் பின்னர் ஜனவரி 25ஆம் தேதி நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.