யாழ்ப்பாணம்(Jaffna) – வட்டுக்கோட்டை அராலி பகுதியில் தாயையும் 13 வயது மகனையும், கொடூரமாக தாக்கிய நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுவன் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கமைய இந்த கைது நடவடிக்கை நேற்றையதினம்(9) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த கைது நடவடிக்கை தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கணவனை பிரிந்த தாய் ஒருவரும் மகனும் தனியாக வசித்து வந்துள்ள நிலையில், பளை பகுதியைச் சேர்ந்த சந்தேகநபருக்கும் அந்த தாய்க்கும் இடையே தவறான நட்பு ஏற்பட்டுள்ளது.
மனநலக்குறைவு
இதனை தொடர்ந்து, அந்த பெண்ணின் வீட்டிலேயே சந்தேகநபர் வசிக்க ஆரம்பித்துள்ளதுடன் சில மாதங்களின் பின்னர் அந்த வீட்டினை தனது பெயருக்கு எழுதி தருமாறு கூறி குறித்த பெண் மீதும், மகன் மீதும் தாக்குதல் நடத்தி வந்துள்ளார்.
அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அவரது தாக்குதலினால் அந்த பெண்ணுக்கு தலையில் அடிபட்டு மனநலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்திய சந்தேகநபர், தன்னுடைய தாக்குதல் காரணமாகவே அந்த பெண்ணுக்கு இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதாக அயல்வீட்டாரிடம் தெரிவித்துள்ளார்.
அதன்பின்னர் தாக்குதலுக்கு இலக்கான பெண் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவேளை, அவருடைய மகன் மீதும் தாக்குதல் நடத்தி வீட்டை விட்டு துரத்தியுள்ளார்.