மாபோல, வத்தளையிலுள்ள உஸ்னதுல் ஹஸனா குர்ஆன் மதரசா தனது நான்காவது ஆண்டு நிறைவை நேற்று (07.12.2024) வத்தளை மாபோல, நகரசபை மண்டபத்தில் வெகு விமர்சனமாக கொண்டாடியது.
இந்த மதரசாவில் தற்போது 6 ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். மேலும், 105 மாணவர்கள் தங்கள் கல்வியை முன்னேற்றி வருகிறார்கள்.
இந்த மதரசாவின் அதிபராக சலவுதீன் ஹுசைன் (உமரிக்கா) அவர்கள் பொறுப்பேற்று மதரசாவின் வளர்ச்சியை ஊக்குவித்து வருகிறார்.
அல்-ஹாஜ் இக்பால் அவர்கள், அதன் நிறுவனர் மற்றும் தலைவர் ஆவார். அவர் கல்வி மற்றும் சமூக சேவையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி மதரசாவின் வளர்ச்சிக்கு தனது ஆதரவை தொடர்ந்து வழங்கி வருகிறார்.
இந்த நான்காவது ஆண்டு நிறைவு விழா, மதரசாவின் பணி மற்றும் அதன் சாதனைகளை நினைவுகூரும் ஒரு சிறப்பு நிகழ்வாக அமைந்தது. விழாவில் மாணவர்களும் ஆசிரியர்களும் ஒன்றிணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியதுடன், மதரசாவின் நோக்கங்கள் மேலும் பல்கி வளர வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்தினார்கள்.
