பொதுவாகவே உடல் எடையை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஓட்ஸ் சாப்பிடுவது சிறந்த தீர்வாக இருக்கும்.
பெரும்பாலும் இந்த ஓட்ஸில் கஞ்சி தான் செய்து சாப்பிடுவார்கள். இது வாய்க்கு சுவையான இல்லாத போதும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக பலரும் வேறு வழி இல்லாமல் இதை தொடர்ந்து சாப்பிடுவர்கள்.
ஆனால் இனிமேல் ஓட்ஸை மகிழ்ச்சியாக சாப்பிடலாம். அனைவரும் விரும்பும் அசத்தல் சுவையில் ஆரோக்கியம் நிறைந்த ஓட்ஸ் உப்புமா எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் – 1 12/2 மேசைக்கரண்டி
கடலைப் பருப்பு – 1 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தே.கரண்டி
கடுகு – 1 தே.கரண்டி
சீரகம் – 1 தே.கரண்டி
பெருங்காயத் தூள் – 1/4 தே.கரண்டி
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 4 (கீறியது)
இஞ்சி – 1 துண்டு
கறிவேப்பிலை – 1 கொத்து
பீன்ஸ் – 1 கப் (பொடியாக நறுக்கியது)
பெரிய கேரட் – 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
உப்பு – சுவைக்கேற்ப
ரோல்டு ஓட்ஸ் – 1 கப்
தண்ணீர் – 1/4 கப்
எலுமிச்சை சாறு – சிறிதளவு
வறுத்த வேர்க்கடலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம், பெருங்காயத் தூள் ஆகியவற்றை போட்டு தாளித்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், துருவிய இஞ்சி, கறிவேப்பிலை ஆதியவற்றை அதில் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
ஓட்ஸ் நன்றாக வெந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு, அதில் எலுமிச்சை சாறு, வறுத்த வேர்க்கடலை, கொத்தமல்லியைத் தூவி கிளறினால் அவ்வளவு தான் அட்டகாசமான சுவையில் ஓட்ஸ் உப்புமா தயார்.