புகையிலைக் கொள்வனவால் கோடிக்கணக்கில் மோசடி! பிரதான சந்தேகநபர் கைது

ByEditor 2

Dec 5, 2024

ஊர்காவற்றுறை பகுதியைச் சேர்ந்த புகையிலையைச் செய்கையாளர்களிடம் புகையிலையைக் கடன் அடிப்படையில் கொள்வனவு செய்து, 5 கோடி ரூபாவுக்கும் மேல் நிலுவை வைத்துவிட்டுத் தலைமறைவான பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்றவிசாரணைப் பிரிவினருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே அந்த நபர் தலைமறைவாக இருந்த நிலையில், வவுனியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபருக்கு எதிராக 14 முறைப்பாடுகள் தனித்தனியாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளதோடு அவர் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நேற்று (04.12.2024) முற்படுத்தப்பட்டார்.

விளக்கமறியல் 

இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதவான் சந்தேகநபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *