ரணில் வழங்கிய மதுபான உரிமம் தொடர்பில் வெளிப்படுத்திய பிமல்!

ByEditor 2

Dec 4, 2024

2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 6 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கலால் திணைக்களம் 361 மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ளதாக சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (4) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.மேல் மாகாணத்தில் 110 அனுமதிப்பத்திரங்கள் அதிகளவில் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.மேலும், தென் மாகாணத்திற்கு 48, வடக்கிற்கு 32, கிழக்கிற்கு 22, மத்திய மாகாணத்திற்கு 45, வடமத்திய மாகாணத்திற்கு 14, வடமேற்கு மாகாணத்திற்கு 30, ஊவா மற்றும் சப்ரகமுவவிற்கு தலா 30 அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.இவற்றில் 172 உரிமங்கள் மதுபானம் (வயின் ஸ்டோர்ஸ்) சில்லறை விற்பனைக்காக FL-4 பிரிவின் கீழ் வழங்கப்பட்டவை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *