கடந்த 2022ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட பிரின்சிபி ஸ்கோப்ஸ் ஆந்தை (Otus bikegila), சிறிய தீவு நாடான சௌ தோமே மற்றும் பிரின்சிபியில் மட்டுமே காணப்படுகிறது.தமிழ்நாட்டில் காணப்படும் கொம்பன் ஆந்தையைப் போல், அதன் காதுகளைச் சுற்றி மேல்நோக்கிய வடிவில் இறகுகள் இருக்கும். மேலும் இது பூனையைப் போல ‘மியாவ்’ என்ற தனித்துவமான ஒரு சத்தத்தைக் கொடுக்கும்.பறவைகளைப் பற்றிய தரவுகளை வைத்திருக்கும் ‘பேர்ட்ஸ் ஆஃப் தி வேர்ல்ட்’ அமைப்பின்படி, இந்த ஆந்தை விரைவாக அழிந்து வரும் நிலையில் இருக்கிறது. உலகில் வெறும் 1,100 முதல் 1,600 வரையிலான பிரின்சிபி ஸ்கோப்ஸ் ஆந்தைகளே வாழ்கின்றன.