பணம் கேட்டு Whatsapp குறுஞ்செய்தி வந்ததா..? நாட்டில் பிரபலங்களின் கணக்குகள் ஹேக்!

Byadmin

Dec 3, 2024

இந்த நாட்களில் whatsapp சமூக வலையமைப்பு ஊடாக பல்வேறு தவறான செயல்கள் இடம்பெற்றுள்ளதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவின் பிரதம தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த தெரிவித்தார்.

நாட்டில் உள்ள பல்வேறு பிரபலங்களின் கணக்குகளை ஹேக் செய்யப்பட்டதாகவும், சந்தாதாரர்களுக்கு பணம் வழங்குமாறு கோரி குறுந்தகவல் சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக, தகவலை நம்பி கொடுக்கப்பட்ட கணக்கு எண்களில் சிலர் பணம் வைப்புச் செய்துள்ளதாகவும் தகவல்கள் வௌியாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு, உங்களது கையடக்க தொலைபேசிகளுக்கு வரும் இரகசிய இலக்கத்தையோ அல்லது ஒருமுறை வழங்கப்படும் OTP இலக்கத்தையோ எவருக்கும் வழங்கக்கூடாது என்பதை இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு என்ற வகையில் பொதுமக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், உங்களுக்குத் தெரியாத எந்த தொலைபேசி எண்ணையும் உங்கள் கையடக்க தொலைபேசிகளில் பதிவு செய்ய வேண்டாம். மேலும், பணம் கேட்டால் பணம் வழங்கி ஏமாற வேண்டாம். எச்சரிக்கையாக செயற்படுமாறும் இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு எச்சரித்துள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *