நீர்த்தேக்கங்கள், ஆறுகள் பெருக்கெடுக்கும் அபாயம்

ByEditor 2

Nov 27, 2024

நாட்டின் பல நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிவதாகவும் பெரும்பாலான ஆறுகள் பெருக்கெடுத்து வருவதாகவும் நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.இன்று (27) காலை நிலவரப்படி தெதுரு ஓயா நீர்த்தேக்கத்திற்கு வினாடிக்கு 32,145 கனஅடி நீர் திறந்துவிடப்படுவதாக அதன் பொறியாளர் ஜி. டபிள்யூ. ஏ. சதுரா தில்தாரா தெரிவித்துள்ளார்.இதன் காரணமாக வாரியபொல, நிகவெரட்டிய, மஹவ, கொபேகனே, பிங்கிரிய, பல்லம, ஹலவத்தை, ஆராச்சிக்கட்டுவ, ரஸ்நாயக்கபுர ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட தாழ்நில பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு சதுரா தில்தாரா கேட்டுக்கொண்டார்.இதற்கிடையில், ராஜாங்கனை நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 3,520 கன அடியும், கவுடுல்ல நீர்த்தேக்கத்திற்கு வினாடிக்கு 1,000 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.மேலும், யான் ஓயா நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 6,099 கன அடியும், பராக்கிரம கடலில் இருந்து வினாடிக்கு 5,046 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.இதேவேளை, மகாவலி ஆற்றின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களும் வெள்ளத்தில் பாதிக்கும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் மேலும் தெரிவிக்கிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *