150 மில்லிமீற்றர்அளவில் பலத்தமழை -கடற்றொழிலாளர்களுக்குவிடுக்கப்பட்டஎச்சரிக்கை!

Byadmin

Nov 25, 2024

தென்கிழக்கு வங்காள விரிகுடாபகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுமண்டலம் இன்று தாழமுக்கமாக வலுவடையக் வளிமண்டலவியல் எதிர்வு கூறியுள்ளது.இது மேலும் கூடுமென திணைக்களம் வலுவடைந்து இலங்கையின் கிழக்கு கரையைக் கடந்து வட மாகாணத்தை ஊடறுத்து தமிழகத்தை நோக்கி நகர்கின்றது.இதன் காரணமாகக் கிழக்குமாகாணத்தின் சில இடங்களில் 150மில்லிமீற்றர் வரையான பலத்தமழைவீழ்ச்சி பதிவாகக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.அத்துடன் வடக்கு, வடமத்திய, மத்தியமற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் 100மில்லிமீற்றர் வரை மழை வீழ்ச்சிபதிவாகக்கூடும்.இதேவேளை, மறு அறிவித்தல் வரைமன்னார் முதல் காங்கேசன்துறை,திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும்பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டைவரையான கடற்பிராந்தியங்களுக்கு செல்ல வேண்டாம் கடற்றொழிலாளர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.எனவடக்கு, வடமத்திய மற்றும் கிழக்குமாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது 35-45கிலோமீற்றர் வரை பலத்தபலத்த காற்றுவீசக்கூடும்.அத்துடன் கடலானது இடைக்கிடையே கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *