அவருக்கு ஒரு தோட்டம் இருந்தது. ஒரே மகன் ஆனால் அவன் செய்த ஒரு தவறால் சிறையில் இருந்தான். பெரியவர் தோட்டத்தில் தக்காளி பயிரிடலாம் என்று ஆசை ஆனால் வயது மூப்பின் காரணமாக அவரால் தோட்டத்தில் குழி வெட்டி சரி செய்ய முடியவில்லை.
மகன் கூட இருந்தால் தோட்டத்தில் வேலை செய்ய உதவியாக இருப்பான் என்று மனம் வருந்தி மகனுக்கு தன் நிலைமை குறித்து சிறைச்சாலைக்கு கடிதம் எழுதினார்.
உடனே அவருக்கு கடிதம் வந்தது. ஐயோ அப்பா தயவு செய்து தோட்டத்தை நோண்டாதீர்கள் அதில் தான் நிறைய பொன்னும் பொருளும் புதைத்து வைத்து இருக்கிறேன் என்று.
கடிதம் கூடவே நிறைய காவல்காரர்களும் வந்தார்கள்! மூன்று நாள் அவர் தோட்டத்தை விடாமல் நோண்டினர்! ஒன்றும் கிடைக்கவில்லை!
எதுவும் சொல்லாமல் காவலர்கள் சென்று விட்டனர்.
இரண்டு நாட்கள் கழித்து மகனிடம் இருந்து இன்னொரு கடிதம் வந்தது, அப்பா இப்பொழுது நீங்கள் விரும்பியவாறு தக்காளி பயிரிடுங்கள்! நான் இருக்கும் நிலையில் இதை தான் என்னால் செய்ய முடிந்தது என்று எழுதி இருந்தான்.
Cp