சைபர் தாக்குதல் – வளிமண்டலவியல் இணையத்தளத்தின் தற்போதைய நிலை!

Byadmin

Nov 12, 2024

சைபர் தாக்குதலுக்கு உள்ளான வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையதளம் தற்போது மீட்கப்பட்டு வருவதாக கணினி அவசர பதிலளிப்பு மன்றம் தெரிவித்துள்ளது.

திணைக்களத்தின் இணையத்தளம் கடந்த முதலாம் திகதி சைபர் தாக்குதலுக்கு உள்ளானது.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த கணினி அவசர பதிலளிப்பு மன்றத்தின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு உத்தியோகத்தர் சாருக தமுனுபொல,

“நவம்பர் முதலாம் திகதி, வளிமண்டலவியல் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சைபர் தாக்குதலுக்கு உள்ளானதாக குறித்த திணைக்களம் அறிவித்திருந்தது. இந்த சைபர் தாக்குதலால் வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையதளத்தில் மாற்றம் ஏற்பட்டது.
அது தொடர்பான முதற்கட்ட விசாரணைகளுக்குப் பிறகு, இணையதளத்தை மீட்டெடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையதளத்தில் உள்ள தகவல்கள் வேறு வெளி தரப்பினருக்கு சென்றிருக்கிறதா இல்லையா என்பது குறித்து தற்போது விசாரணை நடந்து வருகிறது. முதற்கட்ட விசாரணையில் தெரியவந்த தகவலின்படி, வெளி தரப்பினரால் எவ்விதமான தகவல்கள் பெறப்பட்டதாகவோ அல்லது திருடப்பட்டதாகவோ வௌியாகியுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *