வாக்காளர் அட்டைகள் கிடைக்கவில்லையா?

Byadmin

Nov 11, 2024

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக பிரதி தபால்மா அதிபர் ராஜித கே.ரணசிங்க தெரிவித்தார்.

இதன்படி இதுவரை 97% உத்தியோகபூர்வ தேர்தல் அறிவிப்புகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இதுவரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்காத வாக்காளர்கள், தமது பிரதேசத்தில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்று பெற்றுக்கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *