அறுகம்பே பகுதிக்கான அமெரிக்க தூதரகம் வழங்கிய பயண எச்சரிக்கையின் அடிப்படையில் ஐக்கிய இராச்சியம் இலங்கைக்கான தமது நாட்டு பிரஜைகளுக்கான பயண ஆலோசனையை புதுப்பித்துள்ளது.
அருகம்பேயில் உள்ள சுற்றுலா தலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு தகவல் கிடைத்துள்ளதால், அந்த பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு நாட்டில் தங்கியுள்ள அமெரிக்க பிரஜைகளுக்கு அறிவித்த்தல் விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.