அகில இலங்கை போட்டியில் தங்கப்பதக்கம்

Byadmin

Oct 19, 2024

இவ்வருடத்திற்கான அகில இலங்கை தமிழ் தினப் போட்டியில் நீர்கொழும்பு அல்-ஹிலால் மத்திய கல்லூரி மாணவி செல்வி முஹம்மத் தாபித் பாத்திமா சஹ்ரா முதலாமிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

நீர்கொழும்பு அல்-ஹிலால் மத்திய கல்லூரியில் க.பொ.த. சாதாரண தரம் பயிலும் செல்வி எம். டி. எப். சஹ்ரா பிரிவு 4 இல் தமிழியல் கட்டுரை வரைதல், இலக்கிய நயத்தலில் போட்டியிலேயே தேசிய மட்டத்தில் முதலிடத்தைப் பெற்று தங்கப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இவர் முஹம்மது தாபித் , பாத்திமா பர்சானா ஆசிரியர் (நீர்/அல்-ஹிலால் ம.க.) ஆகியோரின் சிரேஷ்ட புதல்வியாவார்.

மேல் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இவர் இந்த போட்டியில் பங்குபற்றி இருந்தார்.

மாணவி எம். டி. எப். சஹ்ரா வின் சாதனையை அதிபர், பிரதி அதிபர், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலை சமூகம் பாராட்டி வாழ்த்தியுள்ளது.

அகில இலங்கை தமிழ் மொழித் தினப் போட்டிகள் ஒக்டோபர் மாதம் 05, 06 ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *