அரசாங்க பகுப்பாய்வாளர் நியமனம்!

Byadmin

Oct 15, 2024

அரசாங்க மேலதிக பகுப்பாய்வாளர் பதவியில் சேவையாற்றும் இலங்கை விஞ்ஞான சேவையின் விசேட தர அலுவலர் பத்திரஹே சந்யா குமுதினி ராஜபக்ஷவை அரசாங்க பகுப்பாய்வாளர் பதவிக்கு நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரசாங்க பகுப்பாய்வாளர் பதவியில் கடமையாற்றிய தீபிகா செனவிரத்ன கடந்த 11 ஆம் திகதியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

அதற்கமைய, வெற்றிடமாக உள்ள மேற்குறித்த பதவிக்கு இலங்கை விஞ்ஞான சேவையின் விசேட தர அலுவலர்களிலிருந்து சேவை மூப்பு அட்டவணைக்கு அமைய அடுத்ததாக உள்ள ஆகக்கூடிய சேவைமூப்புள்ள, தற்போது அரசாங்க மேலதிக பகுப்பாய்வாளர் பதவியில் சேவையாற்றும் இலங்கை விஞ்ஞான சேவையின் விசேட தர அலுவலர் பத்திரஹே சந்யா குமுதினி ராஜபக்ஷவை நியமிக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை இவ்வாறு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *