நாம் வழங்கிய உறுதிமொழிகளுக்கேற்ப இலஞ்சம், ஊழலுக்கு சிறிதளவும் இடம் வழங்கப்படாது

Byadmin

Oct 15, 2024

நாம் வழங்கியுள்ள உறுதிமொழிகளுக்கேற்ப இலஞ்சம், ஊழலுக்கு சிறிதளவும் இடம் வழங்கப்படாது. இலஞ்சம், ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு, ஏற்கனவே ஊழல் பற்றிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பை தளமாக கொண்ட வெளிநாட்டு இராஜதந்திரிகள் மத்தியில், உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது-

இவ்விடயங்கள் குறித்து அரசாங்கம் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

நெறிமுறையான நிர்வாகம்,ஊழலை ஒழித்தல், அரச சேவையில் வினைத்திறன், சட்டத்தின் ஆட்சி, பொறுப்புக்கூறல் மற்றும் நேர்மை ஆகியவற்றை உள்ளடக்கிய புதிய கலாசாரத்தை வளர்ப்பதற்கு ஜனாதிபதி அதிக முக்கியத்துவத்தை அளித்துள்ளார். பொருளாதார வெற்றியுடன், இந்த முக்கியமான தூண்கள் இணைந்திருக்க வேண்டுமென நாங்கள் கருதுகிறோம். நாங்கள் வழங்கியுள்ள உறுதிமொழிகளுக்கு ஏற்ப, இலஞ்சம் ஊழலை சிறிதளவும் சகித்துக்கொள்ள இடமளிக்கப்படாது என்றும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *