இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் உயர்பதவிக்கு விண்ணப்பம் கோரல்

Byadmin

Oct 14, 2024

2023 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் (திருத்தத்தின் பிரகாரம்) ஏற்பாடுகளுக்கமைய இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு பணிப்பாளர் தலைமையதிபதியை தெரிவு செய்வதற்கு விண்ணப்பம் கோரல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கு தகுதியான நபர்கள் உரிய விண்ணப்பங்களை பாராளுமன்ற இணையத்தளத்தில் (www.parliament.lk) “இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு பணிப்பாளர் தலைமையதிபதியை நியமித்தல்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள வடிவில் தயாரித்தல் வேண்டும்.

முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அரசியலமைப்புச் பேரவையின் செயலாளர் நாயகம், அரசியலமைப்புச் பேரவை – அலுவலகம், இலங்கை பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே என்ற முகவரிக்கு பதிவுத் தபாலிலோ அல்லது constitutionalcouncil@parliament.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 2024 ஒக்டோபர் 28 அல்லது அதற்கு முன்னர் அனுப்பப்பட வேண்டும்.

இது தொடர்பில் பத்திரிகை அறிவித்தல் நேற்றும் (13) இன்றும் (14) தேசிய பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *