புதிய கட்சியில் மீண்டும் அரசியலில் களமிறங்கும் ரஞ்சன்!

Byadmin

Oct 9, 2024

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தலைமையில் புதிய அரசியல் கட்சியொன்று இன்று (09) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

“ஐக்கிய ஜனநாயகக் குரல்” என்று அழைக்கப்படும் அந்த அரசியல் கட்சியின் சின்னம் ஒலிவாங்கியாகும்.

அக்கட்சியின் தேசிய அமைப்பாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரத்ன டில்ஷான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷும் கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது கருத்து தெரிவித்த ரஞ்சன் ராமநாயக்க,

அம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிடுவோம் என நம்புகிறோம்.

கம்பஹா பட்டியலை நேற்று தேர்தல் ஆணைக்குழுவிடம் கொடுத்தோம்.அங்கீகரிக்கப்பட்டது.

மற்ற அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிடுகிறோம்.

மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப அதிக ஆசனங்கள் கிடைக்கும் என நினைக்கிறேன்.

சமீபத்தில் எதிர்பாராத விடயங்கள் நடந்தன. சிலர் பூஜ்ஜியத்திற்கு சரிந்தனர்.

சிலர் பெரும் வெற்றிப்பெற்றனர். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

வடக்கு கிழக்கிலும் போட்டியிடுகிறோம். நான் கம்பஹாவை சேர்ந்தவன். கம்பஹா மக்கள் எப்பொழுதும் என்னை மிகவும் உயர்வாகவே நடத்தினார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *