IMF, ஜனாதிபதி அநுரவுக்கு அனுப்பிய கடிதம்!

Byadmin

Sep 25, 2024

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அநுர குமார திசாநாயக்கவிற்கு சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு விசேட வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ள கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, இலங்கையின் பங்காளியாக தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும், சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையில் காணப்படும் பரஸ்பரத்துடனான சாதகமான உறவை மேலும் வலுப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், இலங்கையின் அபிவிருத்தி மற்றும் சீர்திருத்த இலக்குகளை அடைவதற்கு பூரண ஆதரவை வழங்க தயாராக இருப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு கிறிஸ்டலினா ஜோர்ஜீவா உறுதியளித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *