ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் மேலும் அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவை தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பான முறைப்பாடுகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் 31ஆம் திகதி முதல் நேற்றுடன் முடிவடைந்த ஒரு மாத காலப்பகுதியில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வந்த மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2644 ஆக அதிகரித்துள்ளது.