சாதித்துக் காட்டினார் சஹ்மி சஹீட்

Byadmin

Aug 27, 2024

நடை பயணத்தின் முலம் நாட்டை சுற்றி வரும் சாதனை பயணத்தில் சஹ்மி சஹீட் 26. 08. 2024 வெற்றி கண்டார்.

இவரது பயணம் 13. 07. 2024 பேருவளையில் இருந்து தென்பகுதியூடாக ஆரம்பிக்கப்பட்டது.

50 நாற்களில் நாட்டைச் சுற்றிவரும் இவரது முயற்சி இன்று 47 நாற்களில் 1520 Km நடை பயணம் முடிவடைந்தமை விஷேட அம்சமாகும்.

இலங்கை வரலாற்றில் நடை பயணத்தில் நாட்டைச் சுற்றி வந்த இரண்டாவது நபராகவும், குறைந்த வயதில் நாட்டைச் சுற்றும் முதலாவது சாதனை வீரனாகவும் தனது பயணத்தை ஆரம்பித்தார்.

இன்று பேருவளை நகரம் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு மேடை அமைத்து, இவருக்கு வாழ்துதுத் தெரிவிக்க, நாட்டின் நாலா பக்கங்களில் இருந்தும் மக்கள் பேருவளையை நோக்கி படையெயடுத்து, பேருவளையில் சித்திர முக்கியத்துவம் வாய்ந்த சனத்திரள் , சன சமுத்திரம் ஒன்று கூடியது.

பேருவளை நகரம் சமுத்திர வெள்ளத்தால் மூழ்கித் தத்தளித்தது. கொடை வள்ளல் நழீம் ஹாஜியார் அவர்களின் ஜனாஸாவுக்குப் பின் பேருவளை நகரி்ல் ஒன்று கூடிய மாபெரும் சன சமுத்திரம் இதுவாகும்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *