நமது செவிகளும், அல்குர்ஆனின் அற்புதமான அறிவிப்பும்

Byadmin

Aug 22, 2024

நம் காதில் முப்பதாயிரம் செவிவழி சார்ந்த செல்கள் உள்ளன. நம் நலனுக்காக அந்த ஆண்டவன் எத்திசையிலிருந்து சத்தம் வருகிறது என்று கண்டறிய நமக்கு இரண்டு காதுகளை ஆக்கிவைத்துள்ளான்.

ஆக, வலதுபுற காதுக்கு முதலில் சத்தம் வந்தடைந்தால் அதனை நொடிப் பொழுதில் கணக்கிட்டு நம் மூளைக்கு தகவல் கொடுக்கவும் நாம் வலது புறம் திரும்பிப் பார்க்கவும் நமது காதில் நுட்பமான தொடர்பாடல் சாதனம்  உள்ளது.

உதரணமாக நாம் பாதையில் நடக்கும் போது நமக்கு பின்னால் வலதுபுறமாக வாகனம், ஹார்ன் அடிக்கும் சத்தம் கேட்டால் உடனடியாக வலது புறமாக நாம் திரும்பிப் பார்த்து ஓரமாக ஒதுங்கிக் கொள்கிறோம்.

இதன் அர்த்தம், இடது காதுக்கு அந்த சத்தம் போக முன்னர், ஒரு வினாடியை ஆயிரத்து அறுநூற்று இருபது பகுதிகளாக பிரித்து அதில் ஒரு பகுதி வேகத்தில் வலதுபுற காதுக்கு சத்தம் முதலில் சென்று மூளைக்கு தகவல் சென்று நாம் வலது புறமாக திரும்பிப் பார்க்கின்றோம் என்பதாகும்!

வான் மறை வசனம் ஒன்று பின்வருமாறு கூறுகிறது:

((நீங்கள் எதையும் அறியாதிருந்த நிலையில் உங்கள் அன்னையரின் வயிறுகளிலிருந்து அல்லாஹ் உங்களை வெளியேற்றினான்;  நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு – செவிப்புலனையும், பார்வைகளையும், அவனே உங்களுக்கு அமைத்துவைத்தான்.))

📖 அல்குர்ஆன் : 16:78)

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *