வீதி விபத்துகளில் 1,417 பேர் உயிரிழப்பு

Byadmin

Aug 21, 2024

இந்த வருடத்தில் இதுவரை 1,417 பேர் வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வருடாந்தம் சுமார் 1000 பேர் மோட்டார் சைக்கிள் விபத்துக்களால் உயிரிழப்பதாக போக்குவரத்து பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்.

இந்திக்க ஹப்புகொட மேலும் கருத்து தெரிவிக்கையில்,

”3,000 க்கும் மேற்பட்ட வீதி விபத்துகள் நடக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் இடம்பெறும் விபத்துகளில் மூன்றில் ஒன்று மோட்டார் சைக்கிள் விபத்து. 2023 இல் வீதி விபத்துகள் குறைந்துள்ளன. 2024 ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 10 வரை, 1,352 ஆபத்தான வீதி விபத்துகளில், 1,417 பேர் உயிரிழந்துள்ளனர்” என்று கூறினார்.

கடந்த வருடம் 328 பாடசாலை மாணவர்கள் வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹபுகொட தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ஒவ்வொரு 10 வருடங்களிலும் 30,000 க்கும் மேற்பட்ட பிள்ளைகள் விபத்துக்களில் உயிரிழப்பதாகவும் அவர் கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *