பொது மக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

Byadmin

Aug 3, 2024

கிளப் வசந்த உட்பட இருவரைக் கொன்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

கடந்த ஜூலை 8ஆம் திகதி, அத்துருகிரி நகரில் பச்சை குத்தும் நிலையத்தில் டி56 துப்பாக்கியால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கிளப் வசந்தா உள்ளிட்ட இருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் 4 பேர் துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்தனர்.

இந்தக் குற்றச் செயல் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் விசாரணை அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களின் 03 புகைப்படங்களை பொலிஸார், ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர்.

சந்தேக நபர்களின் விவரம்-

  1. முழுப்பெயர் – தாருகர வருண இந்திக்க டி சில்வா அல்லது “சங்க” தேசிய அடையாள அட்டை எண் – 951350753V
  2. முழுப்பெயர் – பெட்டி ஹரம்பகே அஜித் ரோஹன அல்லது “சண்டி”
    தேசிய அடையாள அட்டை எண் – 199207801772
    முகவரி – இல. 655/A, மாகும்புர, அஹுங்கல்ல
  3. முழுப்பெயர் – முதுவா துர தரிந்து மதுசங்க டி சில்வா அல்லது “பஹிரவயா”

மேற்குறிப்பிட்ட சந்தேக நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார், பொதுமக்களை கோரியுள்ளனர்.

தொலைபேசி எண்

  1. பொறுப்பதிகாரி, குற்றப் பிரிவு மேல் மாகாண தெற்கு – 072-4222223
  2. பொறுப்பதிகாரி, அத்துருகிரிய பொலிஸ் நிலையம் – 071-8591657

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *