கொடைக்கானல்…

Byadmin

Aug 10, 2024

அழகிய கொடைக்கானலை கண்டுபிடித்தவர்கள் ஆங்கிலேயர்கள்..
1800 களில் கோடை வெப்பத்தை தாங்க முடியாத ஆங்கிலேயர்கள் குளிரான பகுதியை கண்டுபிடிப்பதற்காக பி.ச. வார்ட் என்ற ஆங்கிலேயரை தமிழ்நாட்டின் தென்பகுதிக்கு அனுப்பி வைத்தனர் அவர் பழனி மலைத் தொடரின் பெயரிடப்படாத ஒரு பகுதியை கண்டறிந்தார்…
இதற்கு முன்பே இங்கு பல நூறு ஆண்டுகளாக பளியர் இன மக்கள் வாழ்ந்து வந்தனர் அவர்கள் மலைப்பகுதிகளில் விளையும் கிழங்கு மற்றும் காய்கறிகளை கீழே உள்ள பெரியகுளம் பகுதிக்கு வந்து விற்று விட்டு செல்வார்கள்…
அது ஒரு ஒத்தையடி பாதை அந்தப் பாதையின் வழியாக 1821 ஆம் ஆண்டு தனது ஆய்வை தொடங்கினார் வார்ட் பெரிய குளத்தில் இருந்து கும்பக்கரை வழியாக ஏழு கிலோ மீட்டர் தொலைவுக்கு மேலே சென்றவுடன் வெல்லக்கவி என்ற கிராமம் வந்தது அதுதான் ஆங்கிலேயர்கள் கால் பதித்த இன்றைய கொடைக்கானலின் முதல் பகுதி.

அங்கிருந்து டால்பின் நோஸ் என்கிற ஒரு பகுதி உள்ளது அந்த வழியாக அவர் சென்ற இடம்தான் இன்றைய கொடைக்கானல் அந்தக் குளிர் அவருக்கு மிகவும் பிடித்துப் போக அங்கேயே தங்கி விட்டார் அவர் தங்கியது மட்டுமல்லாமல் இந்த சூழல் மிகவும் அழகாக இருக்கிறது என்று பிற ஆங்கிலேயர்களையும் அந்த பகுதிக்கு அழைத்தார்…
அவர் 1825 ஆம் ஆண்டுகளில் கட்டிய முதல் கட்டிடம் இன்றும் கொடைக்கானலில் உள்ளது இந்த செய்தி பல ஆங்கிலேயர்களுக்கு தெரியவே அவர்களும் அங்கு வந்து தங்கத் தொடங்கினர் கொடைக்கானல் மலையின் பூர்வ குடிகளை தவிர்த்து சமவெளி பகுதியில் இருந்து மக்கள் முதல் முதலாக குடியேறிய ஆண்டு 1845 மே 26 இந்த ஆண்டுடன் கொடைக்கானல் உருவாகி 179 ஆண்டுகள் ஆகிறது…

அப்போதைய மதுரை ஆட்சியர் லேவிங்ஸ் தன் நண்பர் ஜான் டேவ் உடன் இணைந்து உருவாக்கிய ஏரியே இன்றைய கொடைக்கானலின் நட்சத்திர ஏரி…
1860 ஆம் ஆண்டு தான் முதன் முதலில் கொடைக்கானல் என்ற பெயர் அரசிதழில் இடம்பெற்றது…

கொடைக்கானலை மூன்று வகையாகப் பிரிப்பார்கள் கீழ்மலை நடுமலை மேல்மலை கீழ்மலை என்பது இன்றைய பெருமாள் மலை என்பது தரையில் இருந்து சுமார் 3000 அடி உயரம் கொண்டது நடுமலை என்பது இன்றைய கொடைக்கானல் கொடைக்கானல் சுமார் 4500 முதல் 5000 அடி உயரம் கொண்டது மேல்மலை என்பது பூம்பாறை மன்னவனூரை அடுத்த கிளாவரை என்கிற பகுதி கிளாவரையை தாண்டியவுடன் மூனார் பகுதி வந்துவிடும் கிளாவரை தரையில் இருந்து சுமார் 6500 அடி உயரம் கொண்டது இது மிகவும் குளிர்ச்சியான பகுதி…

கொடைக்கானல் சுற்றுலா வருபவர்கள் பெரும்பாலானோர் யாரும் மேல் மலைக்கு செல்வதில்லை

இயற்கையின் தேடல் தொடரும்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *