சுய மரியாதை (கற்பனைக் கதை)

Byadmin

Aug 9, 2024

கணவனுக்கும் மனைவிக்கும் சிறிய தகராறு. தகராறு பெரிதாகி ஒருவரோடு ஒருவர் பேசுவதை நிறுத்திவிட்டனர்.

ஒரு நாள் கணவன் தொழில் விசயமாக அதிகாலை 5மணிக்கு புறப்பட வேண்டியிருந்தது.
மனைவியிடம் நேரடியாக சொல்ல சுயமரியாதை இடம்தரவில்லை.

அதிகாலை 5மணிக்கு எழுப்பிவிடு என ஒருதாளில் எழுதி மனைவியின் தலையணையின் கீழ் வைத்துவிட்டு மனைவி காலையில் எழுப்பிவிடிவாள் என்ற நம்பிக்கையில் தூங்கிவிட்டான்.

காலையில் எழுந்து நேரத்தை பார்த்தால் மணி 7. பயங்கர கோபத்தோடு மனைவியை பார்த்தான். ஏன் என்னை எழுப்பிவிடவில்லை என கோபமாக கேட்டான்.

மனைவி அமைதியாக கணவனின் தலையணையை காட்டினாள். அதன்கீழ் ஒரு தாளில் மனைவி எழுதிவைத்திருந்தாள் ” மணி 5 ஆகிவிட்டது எழுந்திருங்கள்” என்று!

இந்த கதையில் சுய மரியாதையை காப்பாற்ற வேண்டி சீட்டில் எழுதி வைத்த கணவன், காலை தாமதமாக எழுந்தவுடன் கோபத்தில் சுய மரியாதையை மறந்து ஏன் என்னை எழுப்பி விடவில்லை என்று கேட்கிறார். முதல் நாள் இரவு கொஞ்சம் தனது சுய மரியாதையை மறந்து மனைவியிடம் எழுப்பிவிட சொல்லி இருந்தால் பயணம் தடைபட்டு இருக்காது.

இதே தவறைத்தான் இன்று நம்மில் பலரும் செய்து கொண்டுஇருக்கிறோம். முதலில் சுய மரியாதையை யாரிடம் எங்கே காட்ட வேண்டும் என்று தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

மனைவி என்பவள்
உன்னில் ஒரு பாதி

உன் உயிரில் ஒரு பாதி
உன் உடலில் ஒரு பாதி

அப்படிப்பட்ட மனைவியிடம் கொஞ்சம் ஈகோ வை மறக்க பழகுங்கள். இது ஆண்களுக்கு மட்டுமல்ல , பெண்களும் இதே தவறைத்தான் செய்கிறார்கள். இதனால் பாதிக்கப்படுவது இருவருமே தான்
படித்ததில் பிடித்தது
பகிர்வு.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *