இவ்வருடம் இதுவரையான காலப்பகுதி வரை 13 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த காலப்பகுதியில் 32,183 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.
மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, இதுவரை அங்கு 12,786 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 7,585 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கம்பஹா மாவட்டத்தில் 3,452 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வடமாகாணத்தில் 4,589 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், யாழ்ப்பாண மாவட்டத்தில் மாத்திரம் 4,020 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
சப்ரகமுவ மாகாணத்தில் இந்த வருடம் இதுவரையில் 3,329 டெங்கு நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தில் தீவிரமாகியுள்ள டெங்கு நோய்!
