எதிர்கட்சி தலைவர் விடுத்துள்ள பகிரங்க சவால்!

Byadmin

Jul 28, 2024

மக்களால் தெரிவு செய்யப்படாத பதில் ஜனாதிபதி தனது ரோயல் கல்லூரி சகாவான பிரதமர் தினேஷ் குணவர்தன ஊடாக, பாராளுமன்ற சிறப்புரிமைகளுக்குள் மறைந்து கொண்டு, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என கூறுகிறார். 
அந்த தீர்மானம் அடிப்படையற்றதா? இந்த கதையை பாராளுமன்றத்திற்குள் கூறாமால் முதுகெழும்பு இருக்குமாயின் வெளியே வந்து மேடையில் கூறுமாறு அமைச்சரவைக்கும், பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கும்,  மக்களால் தெரிவு செய்யப்படாத பதில் ஜனாதிபதிக்கும் சவால் விடுகின்றேன். 
அவ்வாறு நடந்தால் நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் அவர்கள் பதில் கூற வேண்டிவரும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இரத்தினபுரியில் நேற்று (27)  நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் மக்கள் அரண் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி வகித்த போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக எடுத்த தீர்மானங்கள் தொடர்பாக ஜனாதிபதியாக பதவி வகித்த பின்னர் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களுக்கு பதிலளிக்க வேண்டி நேர்ந்தது.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரச பதவிகளில் எவரும் கடைசி வரை ஜனாதிபதியாக இருக்க முடியாது. எவரும் கடைசி வரை பிரதமராகவும் இருக்க முடியாது. எவரும் கடைசி வரை எப்போதுமே ஆளும் கட்சியில் இருக்கப்போவதுமில்லை. 
மக்களின் தீர்மானம் இந்த முறை சரியானதாக, போலியற்ற ஜனநாயகத் தன்மையுடன் மீண்டும் பொது மக்கள் யுகத்தை ஆரம்பிக்கும் போது, அரசியலமைப்பு, மீயுயர் சட்டத்தை, நீதிமன்ற தீர்மானங்களை மீறுவோருக்கு தராதரம் பாராது அனைவருமே பதில் சொல்ல வேண்டி வரும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நாட்டின் அரசியலமைப்பு அப்பட்டமாக மீறப்படும்போதும், நீதிமன்ற தீர்மானங்களுக்கு சவால் விடுக்கப்படும் போதும், நாட்டைக் காப்பாற்றுவோம் என்று கூறும் வாய்ச் சொல் தலைவர்கள் மௌனமாக இருக்கிறார்கள். 
இது குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அமைச்சரவையையும், பிரதமரும், ஜனாதிபதியும் நீதிமன்றங்களை அவமதிக்கும் போது வாய்ச் சொல் வீராப்புத் தலைவர் மௌனம் சாதிக்கிறார். 
அவருக்கும் அரசாங்கத்துடன் டீலில் இருப்பதாக தெரிகிறது. வாய்ச் சொல் தலைவர்களுக்கு ஜனாதிபதியுடனும், அரசாங்கத்துடனும் டீல் இருந்தாலும், ஐக்கிய மக்கள் சக்திக்கு மக்களுடன் மட்டுமே டீல் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *