வீதியில் தவிக்கும் தாய்

Byadmin

Jul 26, 2024

கேகாலை – கலேவெல பிரதேசத்தில் 80 வயதுடைய தாயை மகள் வீதியில் விட்டுச்சென்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

கேகாலை – கலிகமுவ பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட மெனிகே என்ற 80 வயதுடைய தாய் கலேவெல எனமெல்பொட பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

தனது மகளால் கைவிடப்பட்ட இந்த தாய் தற்போது கலேவெல எனமெல்பொட பிரதேசத்தில் தங்கியுள்ளதாகவும், தனக்கு நீதியை பெற்றுத்தருமாறு பொலிஸ் மற்றும் சமூக சேவை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது மகள்  முச்சக்கர வண்டியில் ஏற்றிக்கொண்டு வந்து வீதியில் இறக்கிவிட்டு சென்றதாகவும், கல்வி அறிவு இல்லாத காரணத்தினால்  தன்னை எங்கு அழைத்துச்செல்கிறார்கள் என்பதை அறியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது மகளுக்கு மூன்று வயது இருக்கும் போது தனது கணவர் மாரடைப்பினால் உயிரிழந்ததாகவும் தானும் தனது மகளும் கேகாலை கலிகமுவ பிரதேசத்தில் வசித்து வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் பின்னர் வீடுகளில் கூலி வேலை செய்தும், விறகு விற்றும் மகளை உயர்கல்வி கற்பித்ததாகவும், திருமணமான பின்னர் தன்னை கைவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தான் இறக்கும் வரை தங்கியிருக்க இடமொன்றினை  பெற்றுத்தருமாறும் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *