முஸ்லிம் காவலர்கள் தாடி வைக்கலாம் – சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

Byadmin

Jul 26, 2024

கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் 8 –  டிசம்பர் 8 வரையில் தாம் மக்கா-மதினாவுக்கு புனிதப்பயணம் போய்விட்டு வரயிருப்பதாக அனுமதிகோரி அதுபடி போயும் வந்தார் கிரேடு-1 காவலர் (கான்ஸ்டபிள்) அப்துல் காதர் இப்ராஹிம் . அதன் பிறகு அவர் பணியில் சேரமுடியாமல் காலில் ஏற்பட்ட புண் காரணமாக விடுமுறையை அதிகப்படுத்தக்கோரி விண்ணப்பிக்க, முகத்தில் தாடி வைத்திருந்த காரணத்திற்காக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து,  உடனடியாக அப்போதைய டிஜிபி இவருக்கு  சஸ்பெண்ட் செய்து மூன்று ஆண்டுகளுக்குட்பட்ட இக்ரிமண்ட் தொகையை நிறுத்தியும் வைத்தார்.

இதனை எதிர்த்து மதுரை கிளை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த காவலர் இப்ராஹீம் தரம் வாதங்களை ஏற்று சென்னை உயர்நீதிமன்ற நீதியரசி விக்டோரியா கௌரி அவர்கள், 1957 மதராஸ் காவலர்கள் உரிமையில் சிறுபான்மை சமூகத்தின்னர் அவர்களுக்குண்டான மத உரிமைகளை பேணிக்கொள்ள வழியிருப்பதாக கூறி இப்ராஹிம் வழக்கினை முடித்து வைத்துள்ளார். 

காவல்துறையில் பணிபுரியும் முஸ்லிம் அதிகாரிகளுக்கும் இன்னபிற அரசு அலுவலர்களுக்கும் இருந்த தாடி வைக்கும் உரிமையை எடுத்துக்கூறி அதனை கடைபிடித்துக்கொள்ள உத்தரவிட்டுள்ளார் நீதியரசி விக்டோரியா கௌரி.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *