சம்பள முறைப்பாடுகளுக்கான முன்மொழிவுகள் அழைப்பு!

Byadmin

Jul 23, 2024

அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளைக் கையாள்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழு முன்மொழிவுகளை கோர ஆரம்பித்துள்ளது.
சம்பள கொடுப்பனவுகளை திருத்துவதற்கான முன்மொழிவுகள் இங்கு ஏற்றுக்கொள்ளப்பட உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விண்ணப்பத்தை ஜனாதிபதி அலுவலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://www.presidentsoffice.gov.lk/ என்ற இணையத்தளத்திற்குச் சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
எவ்வாறாயினும், அனைத்து முன்மொழிவுகளின் மென் பிரதியொன்றை மட்டுமே PDF வடிவில் saec@presidentsoffice.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான முன்மொழிவுகள் ஓகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *