காசாவில் மிகக் கொடிய வைரஸ் கண்டுபிடிப்பு

Byadmin

Jul 21, 2024

மிக விரைவாகப் பரவக்கூடிய போலியோ வைரஸின் திரிபு, காஸா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

காசா பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட கழிவு மாதிரிகளில் இந்த வைரஸின் திரிபு கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால், அந்த நபர்களுக்கு உடல் ஊனம் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதனால் பாலஸ்தீனியர்கள் பெரும் ஆபத்தில் உள்ளதாக உலக சுகாதார அமைப்பும் காஸாவின் சுகாதார அமைச்சக அதிகாரிகளும் கூறுகின்றனர்.

போலியோ வைரஸின் திரிபு VDPV2 என அடையாளம் காணப்பட்டுள்ளது.

கடந்த மாதம் கான் யூனிஸ் மற்றும் டெய்ரா அல்-பலா ஆகிய இடங்களில் சேகரிக்கப்பட்ட 6 மாதிரிகளில் இந்த வைரஸ் திரிபு கண்டறியப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *