உறங்கிய போது வெடித்துச்சிதறிய தொலைபேசி – இலங்கையில் அதிர்ச்சி

Byadmin

Jul 13, 2024

காலியில் நள்ளிரவு நேரத்தில் கையடக்க தொலைபேசி வெடித்து சிதறிய நிலையில் அதன் உரிமையாளர் உயிர் தப்பியுள்ளார்.

கையடக்க தொலைபேசியை அருகில் வைத்துக் கொண்டு உறங்கிய நபரின் கையடக்க தொலைபேசியே வெடித்து சிதறியுள்ளது.

இந்த சம்பவம் இன்று -13-  அதிகாலை 2.45 மணியளவில் ஏற்பட்டதாக பாதிக்கப்பட்ட நபர், சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

சத்தம் கேட்டு கண் விழித்துப் பார்த்த போது, அது தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போதும் உடனடியாக எழுந்தமையினால் உயிர் தப்பியதாகவும், அவ்வாறில்லை உயிராபத்து ஏற்பட்டிருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவோர் இவ்வாறு அருகில் வைத்துக் கொண்டு உறங்க செல்வது, மின்சாரத்துடன் இணைந்ததாக சார்ஜில் வைத்து உறங்குவதையும் தவிர்க்குமாறும் அவர் கேட்டுள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *