எதிர்புறமாக சுழலத் தொடங்கியுள்ள பூமியின் மையம்!

Byadmin

Jul 7, 2024

பூமியின் மையமானது மெல்ல மெல்ல எதிர்ப்பிப்புறமாக சுற்றத் தொடங்கியுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். 
Crust, mantle, வெளிப்புற மையம் மற்றும் உள்புற மையம் ஆகிய 4 அடுக்குகளாக பூமி அமைத்துள்ளது.
இயற்கையாக உலகம் அதன் சுழற்றிச் பாதையில் சுற்றும் வேலையில் பூமியின் மையத்தில் உள்ள திடமான மெட்டல் மற்றும் நிக்கல் உலோகங்களால் ஆன INNER CORE என அழைக்கப்படும் பந்து போன்ற அமைப்பு தனிச்சையாக சுற்றி வருகிறது.
 நிலவில் அளவில் 70 சதவீதம் உள்ள இந்த உட்புற மைய உலோக பந்தின் சுழற்சி குறித்து கடந்த நூற்றாண்டு முதலே விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்து விவாதங்கள் நிகழ்த்தி வருகின்றனர்.
இந்த நிலையில்தான் கடந்த ஜூன் 12 ஆம் திகதி வெளியான NATURE ஆய்வு இதழில் வெளியான கட்டுரையில், பூமியின் இந்த மைய உலோக கோளத்தின் சுழற்சியில் சமீப காலங்களாக மாற்றம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகளின் கூறி வரும் கூற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுழற்சி மட்டுமின்றி இந்த மையப் பகுதியின் சுழற்சி வேகத்திலும் மாறுபாடு ஏற்பட்டுள்ளது. 
இதற்கு முன்னர் வெவ்வேறு கால கட்டங்களிலிலும் தற்போதும் பூமியில் உள்ள கடல் அலைகள் வீசுகின்ற தன்மைகளையும், பூமியில் ஏற்பட்ட பெரிய அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களின் தரவுகளையும் கணக்கிட்டு பூமி அடுக்கில் உள்ள மையப்பகுதி எதிர்புறமாக சுழலழத் தொடங்கியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *