ஹிஜாப் அணிய தடை விதித்த பிரபல இஸ்லாமிய நாடு!

Byadmin

Jun 22, 2024

மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தான் நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
தஜிகிஸ்தான் நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிய தடை , முக்கிய பண்டிகைகள் கொண்டாட தடை உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தடையை மீறி பெண்கள் ஹிஜாப் அணிந்தால் இலங்கை மதிப்பில் 18 இலட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
அரசின் இந்த புதிய சட்டங்களை மீறினால் அரசு அதிகாரிகளுக்கு 10 இலட்சமும் மத தலைவர்களுக்கு 18 இலட்சமும் அபராதம் விதிக்கப்படும் எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
தஜிகிஸ்தான் அரசாங்கம் 2007 ஆம் ஆண்டில் கல்வி அமைச்சகம் இஸ்லாமிய உடை மற்றும் மேற்கத்திய பாணி மினி ஸ்கர்ட் இரண்டையும் மாணவர்களுக்கு தடை செய்தபோது ஹிஜாப் மீது நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
1991 ஆண்டு சோவியத் யூனியன் உடைந்த போது தஜிகிஸ்தான் நாடு உருவானது. இந்நாட்டில் 1 கோடி மக்கள் வசிக்கின்றனர். இந்நாட்டில் 96 சதவீதம் இஸ்லாமியர்கள் வசிக்கின்றனர்.
கொசோவோ, அஜர்பைஜான், கஜகஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் உட்பட பல முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள், அரசாங்க அதிகாரிகளுக்கு புர்கா மற்றும் ஹிஜாபை தடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *