பிறப்புச் சான்றிதழ் இல்லாமையால், தேசிய அடையாள அட்டைகளை பெறாதவர்களின் கவனத்திற்கு!

Byadmin

Jun 22, 2024

பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் இதுவரை தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியாத 40 வயதுக்கு மேற்பட்டடோர் தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் இன்னும் உள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கான அவகாசம் இம்மாதம் 30ஆம் திகதி வரை உள்ளதாக அந்த திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி குறிப்பிட்டார்.

முன்னதாக இதற்கான விண்ணப்பங்களை அனுப்ப மார்ச் 31ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், பிரதேச செயலாளர்களின் கோரிக்கைகளை கருத்திற் கொண்டு விண்ணப்பங்களை அனுப்பி வைப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி மேலும் தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *