எகிப்தின் பஹாதா என்ற நகரில் இருந்து மஜ்தா முஹம்மது மூஸா என்ற இந்த அம்மையார் நடந்தே வந்து புனித ஹஜ் கடமையை நிறைவேற்றியுள்ளார்.
கையில் ஒரு பை..! அவ்வளவு தான் லக்கேஜ்..!
2010 ம் ஆண்டு இவரின் கணவர் இறந்து விட்டார்.
நடந்தே ஹஜ் கடமையை நிறைவேற்ற வேண்டும். என்ற லட்சியம் பல ஆண்டுகளாக இருந்தது.
இந்த வருடம் தனது லட்சியம் நிறைவேறி விட்டதாக கூறும் இந்த அம்மையாருக்கு 63 வயது.
இந்த வயதில் கால் வலி. நரம்பு மண்டல பிரச்சனை என்று பல உபாதைகள் இருந்தது.
நடந்தே ஹஜ் செய்ய வேண்டும். என்ற நிய்யத் துடன் நடக்க ஆரம்பித்த பிறகு அத்தனை உபாதைகளும் காணாமல் போய் விட்டதாக நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
இந்த வாரத்தில் எகிப்து திரும்பி விடுவதாக இருக்கிறார்.
இவரின் ஹஜ்ஜை அல்லாஹ் கபூல் செய்வானாக. ஆமீன்.