பாலஸ்தீனியர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு நேதன்யாகு பொறுப்பேற்க வேண்டும் என்று சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் கோரிக்கை விடுத்துள்ளார்.
சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து 1967 எல்லை மற்றும் ஜெருசலேமை தலைநகராக கொண்ட ‘பாலஸ்தீன நாட்டை ‘ அங்கீகரிக்க வேண்டுமெனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.